கிறிஸ்துவ மத தலைவர்களை ஸ்டாலின் திடீரென சந்தித்தது ஏன்?
கிறிஸ்துவ மத தலைவர்களை ஸ்டாலின் திடீரென சந்தித்தது ஏன்?
ADDED : ஆக 10, 2026 05:29 AM

- நமது நிருபர் -
சென்னையில் நேற்று முன்தினம், முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. அதேநேரம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வீட்டில், கிறிஸ்துவ மதத் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
இதில், பிஷப் சின்னப்பா, பால் தினகரன் உட்பட 16 திருச்சபைகளின் போதகர்கள் பங்கேற்றனர். த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணி உருவான நிலையில், பா.ஜ., பக்கம் தி.மு.க., நகர தொடங்கி உள்ளது. இந்நிலையில், சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தி.மு.க., ஆதரவாக நிற்கும் என, கிறிஸ்துவ மதத் தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவ திருச்சபை வட்டாரங்கள் கூறியதாவது: முதல்வர் விஜய், தொகுதி மறுவரையறை என்ற பிரச்னையை முன்னிலைப்படுத்தி, கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்களை, தன் தலைமையில் ஓரணியாக உருவாக்கி விட்டார்.
அதே நேரம் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா 2026 என்ற விவகாரத்தை மையப் படுத்தி, கிறிஸ்துவ மதத் தலைவர்களுடன், ஸ்டாலின் நேரடி தொடர்பை புதுப்பித்துள்ளார்.
அந்தமசோதாவை வாபஸ் பெற வைப்பது அல்லது பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை, தி.மு.க., - எம்.பி.,க்கள் மேற்கொள்வர் என, ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
