அ.தி.மு.க., ஒருங்கிணையுமா? 2026 சட்டசபை தேர்தலுக்கு குறி!
அ.தி.மு.க., ஒருங்கிணையுமா? 2026 சட்டசபை தேர்தலுக்கு குறி!
ADDED : அக் 07, 2024 01:28 AM

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியில், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் பெங்களூரு புகழேந்தி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இம்முயற்சியை ஆதரிப்போரை மாவட்ட வாரியாக திரட்டி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில், தனி அமைப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டலில், இன்று மாலை நடக்கிறது. அதில் சட்டசபை தொகுதிக்கு இரு பிரதிநிதிகள் வீதம் பங்கேற்க உள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்த்து, அ.தி.மு.க.,வை ஒருங்கிணைத்து, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது தான் இக்குழுவின் நோக்கம். அதை வலியுறுத்தி, இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். இக்குழுவின் முயற்சிக்கு எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பது, இன்றைய கூட்டத்தில் பங்கேற்போர் வாயிலாக அறிய முடியும் என்கிறது, அ.தி.மு.க., வட்டாரம்.
- நமது நிருபர் -

