தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வுக்கு அனுமதி கிடைக்குமா?
தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வுக்கு அனுமதி கிடைக்குமா?
ADDED : ஆக 07, 2025 01:53 AM

மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியமான, 'காபா'வின் ஆலோசனைக் கூட்டம், இந்த மாதம் டில்லியில் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு நடத்த அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அகழாய்வு செய்ய, மத்திய தொல்லியல் துறையின் ஆலோசனை அமைப்பான, 'காபா'வின் அனுமதி பெற வேண்டும்.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடி, துாத்துக்குடி மாவட்டம் பட்டணமருதுார், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார், நாகப்பட்டினத்தில் உள்ள புத்தவிகாரம், கடலுார் மாவட்டம் மணிக்கொல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிச்சனுார், கோவை மாவட்டம் வெள்ளளூர், சேலம் மாவட்டம் தெலுங்கனுார் ஆகிய இடங்களில், தமிழக தொல்லியல் துறை, அகழாய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கான அனுமதியை, மத்திய தொல்லியல் துறையிடம் ஏற்கனவே கோரி உள்ளது. இந்நிலையில், இந்த மாதம், 'காபா'வின் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதால், அதில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, அடுத்த மாதத்திற்குள் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு அனுமதி கிடைத்தால், டிசம்பருக்குள் அதற்கான நிதியை பெற்று, மழைக்காலம் முடிவுக்கு வந்ததும், அடுத்தாண்டு ஜன., முதல் அகழாய்வை துவக்க, தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டு உள்ளது.
- நமது நிருபர் -

