sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

உள்நாட்டு விமான சேவை; சென்னை முன்னேற்றம் சர்வதேச அளவிலும் மேம்படுத்துமா ஆணையம்?

/

உள்நாட்டு விமான சேவை; சென்னை முன்னேற்றம் சர்வதேச அளவிலும் மேம்படுத்துமா ஆணையம்?

உள்நாட்டு விமான சேவை; சென்னை முன்னேற்றம் சர்வதேச அளவிலும் மேம்படுத்துமா ஆணையம்?

உள்நாட்டு விமான சேவை; சென்னை முன்னேற்றம் சர்வதேச அளவிலும் மேம்படுத்துமா ஆணையம்?


UPDATED : ஜன 02, 2025 05:36 AM

ADDED : ஜன 02, 2025 12:04 AM

Google News

UPDATED : ஜன 02, 2025 05:36 AM ADDED : ஜன 02, 2025 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை விமான நிலையம், உள்நாட்டு விமான சேவையில், நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. சர்வதேச சேவையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பயணியரிடம் எழுந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பரபரப்பான விமான நிலையங்களில், முதல் ஐந்து இடங்களில் சென்னை விமான நிலையம் உள்ளது.

இங்கிருந்து, பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், டில்லி, மும்பை, புனே, புவனேஷ்வர், வாரணாசி, என நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கும்; சிங்கப்பூர், தாய்லாந்து, மலேஷியா, துபாய், இலங்கை என, சர்வதேச நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த 2023ம் ஆண்டை விட, கடந்த ஆண்டு சென்னையில் உள்நாட்டு விமான சேவை, நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

ஆனால், இயக்க சிக்கல், முனையங்கள் மேம்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச விமான சேவையில் முன்னேற்றம் போதுமானதாக இல்லை.

விமான பயணியர் சிலர் கூறியதாவது:


சென்னையில் இருந்து உள்நாட்டில் இயக்கப்படும் விமான சேவையில், பிரச்னை இருப்பதில்லை. சுற்றுலா, கல்வி தொடர்பாக, வெளிநாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் உள்ளது.

விமான டிக்கெட் கட்டணம் ஒருபுறம் இருந்தாலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகளுக்கு நேரடி சர்வீஸ் கிடையாது. இதனால், 'ட்ரான்சிட்' முறையில், ஒரு இடம் சென்று, அங்கிருந்து பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

போதுமான வசதிகள் இருந்தும், நேரடி விமான சேவை ஏற்படுத்த, அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். சென்னையில் இருந்து, முக்கிய சர்வதேச வழித்தடங்களில் விமான சேவை வழங்க, இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறுகையில்,'சென்னை விமான நிலையத்தில், இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் கட்டும் பணி நடந்து வருகிறது.

'பயணியரின் தேவைக்கேற்ப உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்ததும், ஆண்டுக்கு 3 கோடி பயணியரை கையாளும் திறன் பெறும்' என்றனர்.

2024ல் சென்னை விமான நிலைய பயணியர் வருகை விபரம்


மாதம்/ உள்நாடு(லட்சத்தில்)/வெளிநாடு(லட்சத்தில்)
ஜனவரி-13.4 - 5.3
பிப்ரவரி - 12.7 - 4.7
மார்ச் - 13 - 4.7
ஏப்ரல் - 12.8 - 4.5
மே - 13.8 - 5.2
ஜூன் - 12.9 - 4.9
ஜூலை - 13.10 - 5.3
ஆகஸ்ட் - 13.5 - 4.8
செப்டம்பர் - 13.4 - 4.4
அக்டோபர் - 13.4 - 4.5
நவம்பர் - 13.6 - 4.7
★டிசம்பர் மாத தரவுகள் வெளியாகவில்லை



2024ல் சென்னை ஏர்போர்ட்டில் புதிதாக துவங்கிய விமான சேவைகள்


விமான நிறுவனம் பெயர்/வழித்தடம்
★சலாம் ஏர் - மஸ்கட்
★சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் - ஜெட்டா
★ராயல் புருனே ஏர்லைன்ஸ் - புருனே
★தாய் லயன் ஏர் - பாங்காக்



சென்னையில் இருந்து உள்நாட்டில் மற்ற நகரங்களுக்கு அதிக விமான சேவை வழங்கிய வழித்தடங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் விபரம்


* ஏர் இந்தியா பெங்களூரு -776மும்பை- 1799டில்லி -1699
* ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கோல்கட்டா - 369ஹைதராபாத் - 229
* இண்டிகோஅகமதாபாத் -1,164பெங்களூரு - 2,494மும்பை - 3,579கோல்கட்டா - 2,053கோவை - 2,358ஹைதராபாத் - 3,321டில்லி - 3572துாத்துக்குடி - 1277திருவனந்தபுரம் - 1065திருச்சி - 2059
* ஸ்பைஸ்ஜெட்அகமதாபாத் -148கொச்சி -140அந்தமான் -255சீரடி -214மும்பை -960டில்லி -1203



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us