sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 காங்கிரஸ் வெளியேறுமா; 'சீட்' காலியாகுமா? இலவு காத்த கிளியாக காத்திருக்கும் தே.மு.தி.க.,

/

 காங்கிரஸ் வெளியேறுமா; 'சீட்' காலியாகுமா? இலவு காத்த கிளியாக காத்திருக்கும் தே.மு.தி.க.,

 காங்கிரஸ் வெளியேறுமா; 'சீட்' காலியாகுமா? இலவு காத்த கிளியாக காத்திருக்கும் தே.மு.தி.க.,

 காங்கிரஸ் வெளியேறுமா; 'சீட்' காலியாகுமா? இலவு காத்த கிளியாக காத்திருக்கும் தே.மு.தி.க.,

22


ADDED : ஜன 22, 2026 05:16 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:16 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறிய பின், அக்கூட்டணியில் இணைந்தால், தங்களுக்கு கூடுதல் 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இலவு காத்த கிளியாக தே.மு.தி.க., காத்திருக்கிறது.

தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுப்பதற்கு, தி.மு.க., - அ.தி.மு.க., என இரு தரப்பிலும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., தரப்பில் எட்டு தொகுதிகள் வரை தருவதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 21 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், ஒரு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என, தே.மு.தி.க., தரப்பில் பேரம் நடத்தப்பட்டு வருகிறது.

தி.மு.க., கூட்டணியில் ஏழு சீட் வரை தருவதாக பிரேமலதாவிடம் உறுதியளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 10 சட்டசபை தொகுதியுடன், ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என, பிரேமலதா தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற தகவல் பரவியுள்ள நிலையில், இது குறித்து, காங்கிரஸ் மேலிடம் முடிவை அறிவிக்காமல் உள்ளது. ஒருவேளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், த.வெ.க.,வுடன் கூட்டணி என அறிவித்து விட்டால், தி.மு.க., கூட்டணியில் தங்களுக்கு கூடுதல் சீட் கிடைக்கும் என பிரேமலதா நம்புகிறார்.

அந்த ஆசையில், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார். பிரதமர் மோடி நாளை மதுராந்தகத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதில், கூட்டணி கட்சித் தலைவர்களை பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, பா.ஜ.,வில் இருந்து சிலர் நேற்று பிரேமலதாவிடம் பேச்சு நடத்தியதாக தகவல் வெளியானது; ஆனால், அதை பிரேமலதா மறுத்து விட்டார். காங்கிரஸ் முடிவை எதிர்பார்த்து, தே.மு.தி.க., காத்திருக்கிறது.

'கோயல் எதற்காக வந்தார்?'


மதுரையில் எல்.ஐ.சி., பெண் மேலாளர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. விபத்து என கூறிய இந்த சம்பவத்தை, கொலை என போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். இதற்காக, காவல் துறைக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுகள். அதே நேரத்தில், தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலைகள் நடக்கின்றன.
கஞ்சா போன்ற போதை பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கை பராமரித்து, மக்களுக்கான பாதுகாப்பை அரசு உருவாக்க வேண்டும். மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் சென்னை வந்துள்ளார்; என்னை சந்தித்து பேச உள்ளதாக செய்தி போடுகின்றனர். அந்த செய்திகளில், 1 சதவீதம் கூட உண்மையில்லை. கூட்டணி தொடர்பாக, இந்த நிமிடம் வரை யாரும் எங்களை அணுகவில்லை.
பியுஸ் கோயல் சென்னைக்கு வந்தது குறித்து எனக்கு தெரியாது. பிரதமர் சென்னையில் கலந்து கொள்ளும் கூட்டம் கட்சி கூட்டமா, கூட்டணி கூட்டமா என்பது கூட எங்களுக்கு தெரியாது. கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
- பிரேமலதா, தே.மு.தி.க., பொதுச்செயலர்








      Dinamalar
      Follow us