sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா?

/

அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா?

அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா?

அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா?

5


ADDED : நவ 22, 2024 05:13 AM

Google News

ADDED : நவ 22, 2024 05:13 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடுத்த மாதம் 6ம் தேதி, சென்னையில் நடக்கவுள்ள அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில், திருமாவளவனும், விஜயும் ஒரே மேடையில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆட்சியில் பங்கு கேட்கும் திருமாவளவனும், கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தர தயாராக உள்ள விஜயும் சந்தித்து விட்டால், தி.மு.க., கூட்டணியில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த சந்திப்பை தவிர்க்குமாறு, தி.மு.க., தரப்பில் இருந்து திருமாவளவனுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், திருமாவளவன் தலைமையில், சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., சைதை பாலாஜியின் இல்ல திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இது, இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது. இதனால், விஜயுடன் ஒரே மேடையில் பங்ககேற்பதை, திருமாவளவன் தவிர்த்து விடுவார் என தி.மு.க., தரப்பில் அடித்துக் கூறுகின்றனர். ஆனால், அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவை, திருமாவளவன் புறக்கணிப்பதை, கட்சியினர் விரும்பவில்லை.

இது குறித்து, வி.சி., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: த.வெ.க., கொள்கை தலைவராக அம்பேத்கரை விஜய் ஏற்றுள்ளார். அதனால், விஜய் வருகையை சுட்டிக்காட்டி திருமாவளவன் நுால் வெளியீட்டு விழாவை புறக்கணிக்கக்கூடாது. அப்படி புறக்கணித்தால், அம்பேத்கரின் கொள்கையில் திருமாவளவன் திடமாக இல்லை என்ற பேச்சு எழும். சமூக நீதி கொள்கையை நீர்த்து போக செய்து விட்டார் என்ற பேச்சு எழும்.

அதற்கு இடம் தராமல், நுால் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க வேண்டும். விஜயுடன் மேடையை பகிர்ந்தால், கூட்டணிக்குள் குழப்பம் வரும் என்றால், அந்த அளவுக்கா கூட்டணிக்குள் முதிர்ச்சியும் பக்குவமும் புரிதலும் இல்லாமல் இருக்கிறது .

இருந்தபோதும் இதில் திருமா என்ன முடிவு எடுப்பார் என தெரியவில்லை. கருணாநிதி நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடலாம். கவர்னர் தேநீர் விருந்தில் தி.மு.க., மட்டும் பங்கேற்கலாம். ஆனால், விஜய் பங்கேற்கும் புத்தக வெளியீட்டு விழாவில் வி.சி., பங்கேற்க கூடாதா? இவ்வாறு அந்த நிர்வாகி கேள்வி எழுப்பினார்.

ஆக்கப்பூர்வமான அறிவுறுத்தலா; அருவெறுப்பான சுடுசொற்களா?


'தாய்ச்சொல்' என்ற பெயரில் கட்சியினருக்கு திருமாவளவன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: விமர்சனம் என்பது வேறு; அவதுாறு என்பது வேறு. விமர்சனம் என்பது ஒருவரின் அல்லது ஒரு கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் மற்றும் களப்பணிகள் ஆகியவற்றில் காணும் நிறை, குறைகளை மதிப்பீடு செய்வது. குறைபாடுகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், நிறைகளையும் வரவேற்று பாராட்டுவதும் தான் விமர்சனம். ஆனால், அவ்வாறின்றி வாய்க்கு வந்தபடி வன்மத்தை கக்குவது விமர்சனமல்ல: அவதுாறு.
நம்மை விமர்சிப்பவர்களில் இரு வகை உண்டு. நம் மீது நம்பிக்கையும், நம் வளர்ச்சியில் அக்கறையும் கொண்டவர்கள் ஒரு வகை. நம்மை ஏற்க மனமில்லாத, நம் வளர்ச்சியை முற்றிலும் விரும்பாத, நம்மை வீழ்த்தி மகிழ்ந்தாட காத்திருக்கும் சதிகாரர்கள் இன்னொரு வகை.முதல் வகையினர், கொள்கை கோட்பாடுகள் சார்ந்து குறைகளை சுட்டிக்காட்டினாலும், அதில் ஆக்கப்பூர்வமான அறிவுறுத்தல்கள் இருக்கும். அவர்களின் விமர்சனங்களில் கடுமையான காய்தல் இருந்தாலும், காயப்படுத்தல் இருக்காது.
நம்மை நாமே சீர் செய்து கொள்வதற்கு இடமளிக்கும்.ஆனால், இரண்டாம் வகையினர், கொள்கை சார்ந்து விமர்சிப்பதை விட, வெறுப்பை உமிழ்வதிலேயே குறியாய் இருப்பர். அருவெறுப்பான சுடுசொற்களை அள்ளி வீசுவர். உணர்ச்சிகளை துாண்டி, உள்ளத்தை கீறி நம்மை நிலைகுலைய வைப்பதையே நோக்கமாக கொண்டிருப்பர்.
ஆனால், எதிலும் உறுதியில்லா உதிரிகளா நம் எதிரிகள்; ஆதாரம் ஏதுமின்றி இவர்கள் பரப்பும் அவதுாறுகளா நம்மை அசைக்கும் ஆயுதங்கள்; காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கண்டும் காணாமல் கடந்து செல்வோம்; காலமெல்லாம் மக்களுக்காக கடமையாற்றுவதில் கவனம் குவிப்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us