ADDED : ஜன 21, 2024 03:51 AM

இம்மாதம் டில்லியில்
நடைபெற உள்ள, குடியரசு தின விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்கள்
அதிகமாக கலந்து கொள்ள வேண்டும் என, பிரதமர் மோடி விரும்பினாராம்.
இதையடுத்து, 100 பெண்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
டில்லியின்
கடமை பாதையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முன்னிலையில்
நடைபெறும், அலங்கார ஊர்வலத்திலும், மிலிட்டரி பேண்ட் வாசிப்பதிலும் பெண்கள்
தான் பங்கேற்பர். இதை தவிர, இந்திய விமானப்படை வானில் நடத்தும்
சாகசங்களிலும் பெண் பைலட்கள் தானாம். 56 விமானப்படை விமானங்கள் அணி
வகுப்பில் கலந்து கொள்ளும். இதில் 29 பைட்டர் ஜெட்கள். இதில், ஆறு ஜெட்களை
பெண் விமானியர், 'ரபேல், சுகோய்- 30, மிக் 29' போர் விமானங்களை இயக்குவர்;
ஒன்பது பெண் பைலட்கள் மற்ற விமானங்களை இயக்குவர்.
இந்த அணிவகுப்பு,
மங்கள இசையோடு துவங்க உள்ளது. நாதஸ்வரம் உள்ளிட்ட வாத்தியங்களை பெண்கள்
தான் இசைக்க உள்ளனர். இந்த ஆண்டு குடியரசு தின விழா, மகளிர் ஸ்பெஷல்தான்.

