தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/அர்ச்சகர் மீது தாக்குதல்; அட்டூழியம் செய்த வாலிபர்

அர்ச்சகர் மீது தாக்குதல்; அட்டூழியம் செய்த வாலிபர்

அர்ச்சகர் மீது தாக்குதல்; அட்டூழியம் செய்த வாலிபர்

4


UPDATED : செப் 29, 2026 05:29 AM

ADDED : செப் 29, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

4

UPDATED : செப் 29, 2026 05:29 AM ADDED : செப் 29, 2026 04:46 AM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அர்ச்சகர் மீது தாக்குதல்; அட்டூழியம் செய்த வாலிபர்



ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோவிலில், அதிக ஒலியுடன் பக்திப்பாடல் ஒலி பரப்பியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஒருவர், வயது முதிர்ந்த அர்ச்சகரை தாக்கும் வீடியோ, வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது ஒரு சிவன் கோவில். பூஜை செய்யும் அர்ச்சகர் ராமகிருஷ்ணாவுக்கு வயது, 63. அதிக ஒலி தொடர்பாக கேள்வி எழுப்பிய வாலிபருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அர்ச்சகரை இழுத்து கீழே தள்ளிய வாலிபர், எட்டி உதைத்து சரமாரியாக தாக்கும் அந்த காட்சிகள், காண்போரை பதைபதைக்கச் செய்தன. தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெற்றோர் செய்தது சரிதான்; நியாயத்தை உணர்ந்தார் மாணவி



டில்லி கல்காஜி மந்திர் அருகே சமீபத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை குறிப்பிட்டு, அமோதினி ரத்தோர் என்ற பெண் வெளியிட்ட பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியது. 'புகழ் பெற்ற லேடி ஸ்ரீராம் கல்லுாரியில் சேர திட்டமிட்டு, பல மாதங்களாக தயாராகி வந்தேன். மெரிட்டில் சேர்க்கை வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், சுற்று வட்டாரத்தின் பாதுகாப்பின்மையை கருத்தில் கொண்டு, நான் அந்த கல்லுாரியில் சேருவதற்கு பெற்றோர் அனுமதி மறுத்து விட்டனர்' என்று 'லிங்க்டுஇன்' வலைதளத்தில் கூறியுள்ளார் அமோதினி.

Image 1624192

'அன்று நான் கதறி அழுதேன். இப்போது அங்கு நடந்த பாலியல் வன்முறை, குற்றவாளி ஒருவர் கல்லுாரி கேட் முன் கைதானதை பார்த்தால், என் பெற்றோர் செய்தது சரிதான் என தோன்றுகிறது. அவர்களது அச்சம் நியாயமானது' என்ற அவரது பதிவு, வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

'விக்' விலை ரூ.35,000; வாங்கிய பெண் கண்ணீர்



'நிஷ் ஹேர்' நிறுவனத்தில் வாங்கிய 'விக்'கில் இருந்து முடி கொட்டுவதாக இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ, டிரெண்டிங் ஆகியுள்ளது. 'ஆடம்பரத்துக்காக அந்த 'விக்'கை வாங்கவில்லை. புற்றுநோய் பாதித்த என் தாய்க்காக, 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து விக் வாங்கினேன். ஆனால், அதில் முடி உதிர்ந்து கொண்டே இருக்கிறது. பணத்தை வாங்கிக்கொண்டு தரமற்ற ஒரு தயாரிப்பை எங்களுக்கு அனுப்பி விட்டனர்' என்று அவர் வருத்தப்பட்டு பதிவு செய்துள்ளார்.

Image 1624193

'நான் ஒன்றும் சோஷியல் மீடியாவுக்கு கன்டென்ட் தயார் செய்யவில்லை. மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவே இந்த பதிவு. இத்தகைய மோசடியில் ஏமாந்து விட வேண்டாம்' என்ற அவரது பதிவில் ஏராளமானோர் ஆறுதல் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர் .

காபி திரிந்து விட்டதாக புகார்; 'புரியலை' என்கிறது சொமாட்டோ



சொமாட்டோவில் காபி வாங்கிய வாடிக்கையாளர், அது திரிந்து விட்டதால், படத்துடன் புகார் அனுப்பினார். சொமாட்டோவின் தானியங்கி வாடிக்கையாளர் சேவைப்பிரிவு, 'உங்கள் புகாரை புரிந்து கொள்ள முடியவில்லை' என்று பதில் கூறியது. பல முறை, பல கோணங்களில் காபியை படம் எடுத்து அனுப்பியும், மீண்டும் மீண்டும் அதே பதில் வந்ததால் நொந்து போன அந்த வாடிக்கையாளர், எக்ஸ் தளத்தில் புகார் தெரிவித்தார்.

Image 1624194

'இது, வாடிக்கையாளர்களை சமாளிப்பதற்கான சொமாட்டோவின் ராஜதந்திர உத்தி போலிருக்கிறது. ஏ.ஐ., சாட்பாட்டில் போராடுவோர், கடைசியில் முயற்சியை கைவிட்டு விடுவர் என்று நினைக்கின்றனர்' என்கிறார் அவர். அவரது பதிவில், வலைதள பிரியர்கள் பலர் கமென்ட் செய்து தங்கள் அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.

எச்சில் துப்புவதற்கும் வசதி; மெட்ரோ செய்தது சரியா?



மும்பை மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில், எச்சில் துப்புவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது, வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ட இடத்திலும் எச்சில் துப்பும் வழக்கம் கொண்டவர்களை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் இந்த வசதியை மெட்ரோ செய்துள்ளது. 'பொறுப்புடன் நடந்திடுங்கள்' என்ற வேண்டுகோளுடன், 'உலகின் முதலாவது நிர்ணயிக்கப்பட்ட எச்சில் துப்புமிடம்' என்ற அறிவிப்பும் அங்கு வைத்துள்ளனர்.

Image 1624195

அதைக்கண்ட வலைதளவாசிகள், பலரும் கேலி, கிண்டல் நிறைந்த கமென்ட்களை பதிவிடுகின்றனர். 'நாடு, பல நவீன பிரச்னைகளை எதிர்கொள்கிறது. எனவே எச்சில் துப்புமிடம் ஏற்படுத்த வேண்டியுள்ளது' என்கிறார் ஒருவர். 'இன்னும் ஒரு மாதம் கழித்துப் பாருங்கள். அறிவிப்பு பலகை முழுதும் எச்சில் துப்பி இருக்கும்' என்று ஒருவரும், 'மும்பை மெட்ரோ எதை ஊக்குவிக்கிறது' என்று ஒருவரும் கமென்ட் செய்துள்ள னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us