sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம் : காரைக்கால் மாங்கனி விழாவில்கோலாகலம்

/

புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம் : காரைக்கால் மாங்கனி விழாவில்கோலாகலம்

புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம் : காரைக்கால் மாங்கனி விழாவில்கோலாகலம்

புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம் : காரைக்கால் மாங்கனி விழாவில்கோலாகலம்


ADDED : ஜூலை 14, 2011 12:24 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்கால் மாங்கனித்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

இன்று மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கிறது.நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் அம்மையார்கோவிலில் மாங்கனி திருவிழா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.நேற்றுமுன்தினம் இரவு சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது.



நேற்று காலை பரமதத்தர் பட்டாடை, நவமணி மகுடம், பொன்னாலான ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். புனிதவதியார் பட்டாடை மற்றும் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.திருமண மேடையில் பாரம்பரிய மரபுபடி மாப்பிள்ளை வீட்டாருக்கும், மணமகள் வீட்டாரும் கவுரவிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். பின் யாகம் வளர்க்கப்பட்டு மணவிழா சுபசடங்குகள் துவங்கியது. மணமக்களுக்கு சிவாச்சாரியார்கள் கங்கனம் கட்டி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கினர்.காலை 10.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேதமந்திரங்கள் முழங்க புனிதவதியாருக்கு பரமதத்தர் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.



பரமதத்தர் சார்பாக ஆலய குருக்கள் புனிதவதியாருக்கு மாங்கல்யம் அணிவித்தார். பின் மகா பூர்ணாஹூதியுடன், மகா தீபாராதனை நடந்தது. மணவிழாவுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், மாங்கனியுடன் கூடிய தாம்பூலம் வழங்கப்பட்டது.இன்று(14ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு பிக்ஷõடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு பரமதத்தர் தனது பணியாளர்களிடம் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல், 9 மணிக்கு சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் வேதபாராயணம் நான்கு திசையிலும் எதிரொலிக்க பவழக்கால் விமானத்தில் கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பாடு நடக்கிறது.



பக்தர்கள் படையலுக்குப் பின் மாங்கனி வீசும் வைபவம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு அடியார் கோலத்தில் திருமாளிகையில் எழுந்தருளும் சிவபெருமானை புனிதவதியார் எதிர்சென்று அழைத்து வந்து மாங்கனியுடன் அமுது படைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 6 மணிக்கு பரமதத்தர் உணவு அருந்த இல்லத்திற்கு வருதலும், மாங்கனி ஒன்றை ருசித்த பரமதத்தர் மற்றொன்றைக் கேட்க, புனிதவதியார் இறைவனை வேண்டி மற்றொரு மாங்கனி பெற்று தரும் காட்சி தத்ரூபமாக காண்பிக்கப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி பன்னீர்செல்வம் செய்துவருகிறார்.








      Dinamalar
      Follow us