/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்-லைனில் பத்திரப்பதிவு சான்று: கூட்டமைப்பு தலைவர் யோசனை
/
ஆன்-லைனில் பத்திரப்பதிவு சான்று: கூட்டமைப்பு தலைவர் யோசனை
ஆன்-லைனில் பத்திரப்பதிவு சான்று: கூட்டமைப்பு தலைவர் யோசனை
ஆன்-லைனில் பத்திரப்பதிவு சான்று: கூட்டமைப்பு தலைவர் யோசனை
ADDED : செப் 06, 2011 12:56 AM
புதுச்சேரி: பத்திரப் பதிவு சான்றுகளை ஆன்-லைன் மூலம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு தலைவர் ஜெகன்நாதன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு பத்திர பதிவு அலுவலகங்களில் வில்லங்கம், திருமணச் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளுக்கு,பொது மக்களே நேரடியாக விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாலும், பத்திரப்பதிவு பணிகளால் வில்லங்கம், நகல் பத்திரம் மற்றும் திருமணச் சான்றுகள் உரிய நேரத்தில் மக்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளது. வில்லங்கம், திருமணச் சான்று, பத்திர நகல் சான்று உள்ளிட்டவைகளை ஆன்-லைனில் பெறுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.