/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பந்தயம் விபரீதமானது : இட்லி சிக்கி வியாபாரி பலி
/
பந்தயம் விபரீதமானது : இட்லி சிக்கி வியாபாரி பலி
ADDED : செப் 27, 2011 12:25 AM
வில்லியனூர் : வில்லியனூர் அருகே நண்பரிடம் பந்தயம் வைத்து, வேகமாக சாப்பிட்டவர், முழு இட்லி தொண்டையில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
புதுச்சேரி, வில்லியனூர் பெருமாள்புரம் குறவர் காலனியை சேர்ந்தவர் அய்யனார், 35. கருவேப்பிலை-புதினா வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை வியாபாரம் முடிந்து, நண்பர் குமாருடன் கணுவாப்பேட்டை பகுதியில் உள்ள சாராயக்கடையில் குடித்துவிட்டு, அருகிலுள்ள இட்லி கடைக்கு சாப்பிடச் சென்றனர்.
இருவரும் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, 'யார் முதலில் சாப்பிடுகிறார்கள், பார்ப்போமா?' என குமாரிடம், அய்யனார் பந்தயம் வைத்தார். அப்போது அய்யனார், முழு இட்லியை விழுங்கியபோது அது தொண்டையில் அடைத்துக் கொண்டது. அவரை உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாகக் கூறினர். வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.