/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் மா கம்யூ.,வினர் 68 பேர் கைது
/
கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் மா கம்யூ.,வினர் 68 பேர் கைது
கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் மா கம்யூ.,வினர் 68 பேர் கைது
கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் மா கம்யூ.,வினர் 68 பேர் கைது
ADDED : ஜூலை 13, 2011 01:28 AM
புதுச்சேரி : கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய
மா.கம்யூ.,கட்சியைச் சேர்ந்த 68 பேர் கைது செய்யப்பட்டனர்.
கவர்னர் இக்பால் சிங்கை
திரும்ப பெற வேண்டும், கவர்னர் ஒப்புதல் அளித்துள்ள அனைத்துக் கோப்புகளையும்
சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மா. கம்யூ., சார்பில்
கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் நேற்று ராஜ்நிவாஸ் செல்லும் அனைத்து வழிகளிலும் போலீசார்
குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை 10.30 மணிக்கு செஞ்சி சாலை - ஆம்பூர் சாலை
சந்திப்பில் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் முருகன் தலைமையில் கட்சி செயலாளர்
பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜ்நிவாஸ் நோக்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த
புறப்பட்டனர். எஸ்.பி.,நந்தகோபால் தலைமையில் வந்திருந்த போலீசார்
மா.கம்யூ.,கட்சியினரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மா.கம்யூ.,கட்சியினர்,
கவர்னருக்கு எதிராக கோஷம் போட்டனர். கோஷம் போட்ட கட்சியினர் 68 பேர் போலீஸ்
வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மக்கள்
அவதி: மா கம்யூ., போராட்டம் காரணமாக, ராஜ்நிவாஸ் செல்லும் அனைத்து வழிகளையும்
போலீசார் அடைத்து விட்டனர். பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம், தலைமை தபால் நிலையம்
எதிரிலும் பேரிகார்டு போட்டு தடை ஏற்படுத்தினர். இதனால் தபால் நிலையம், டெலிபோன்
அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் மட்டுமல்லாமல், அந்த வழியாக செல்லவேண்டிய அனைவரும்
சிரமப்பட்டனர்.