/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சார்யா கல்லூரியில் ஆசிரியர் தின விழா
/
ஆச்சார்யா கல்லூரியில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 06, 2011 12:59 AM
வில்லியனூர்: வில்லியனூர் ஆச்சார்யா கல்லூரியில் 10ம் ஆண்டு ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஆச்சார்யா கல்வி குழும தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கினார். குழும இயக்குனர் சக்ரவேல் முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் கர்னல் வரவேற்றார். விழாவில், ஆச்சார்யா கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் கண்தானத்திற்கான உறுதிமொழி படிவங்களை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ரமேஷிடம் வழங்கினர். ஆச்சார்யா கல்வி குழுமத்தில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக அரவிந்தன் தலைமையில் ஆசிரியர் தினத்தை 'குரு தேவ்ஸ்' என்று கொண்டாடுவோம் என பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆச்சார்யா பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.