/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுய உதவி குழுக்களுடன் கலந்தாய்வு
/
சுய உதவி குழுக்களுடன் கலந்தாய்வு
ADDED : செப் 06, 2011 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பிரைம் அறக்கட்டளை சார்பில், சுய உதவிக் குழுக்களின் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், மத்திய அரசின் உதவியோடு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு செயல்படுத்தப்படும் ஓய்வூதிய திட்டம் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. காப்பீட்டுக் கழக அதிகாரி சிவசங்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஏற்பாடுகளை பிரைம் டிரஸ்ட் அக்ஷயா கூட்டமைப்பு தலைவி பாஞ்சாலி, இயக்குனர்கள் மஞ்சுளா, தனலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.