sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நூற்றாண்டு பழமையான சிலைகளுடன் 30 ஆண்டுகளாக கொலு வைக்கும் தம்பதி

/

நூற்றாண்டு பழமையான சிலைகளுடன் 30 ஆண்டுகளாக கொலு வைக்கும் தம்பதி

நூற்றாண்டு பழமையான சிலைகளுடன் 30 ஆண்டுகளாக கொலு வைக்கும் தம்பதி

நூற்றாண்டு பழமையான சிலைகளுடன் 30 ஆண்டுகளாக கொலு வைக்கும் தம்பதி


ADDED : அக் 06, 2011 12:59 AM

Google News

ADDED : அக் 06, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பொன்நகரில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கொலு அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.

நவராத்திரி கொலு வைப்பதில் வெள்ளி விழா கண்டு தொடர்ந்து 30 ஆண்டுகளாக நவராத்திரி கொலு வைப்பதை ஆண்டவனுக்கு செய்யும் சேவையாக ஆதித்யா ஓட்டல் உரிமையாளர் கோவிந்தராஜூலு-கிரிஜா தம்பதியினர் கருதி நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியினரின் நவராத்திரி கொலுவில் இடம்பெற்றுள்ள சிலைகள், பொம்மைகள் சமீபத்தில் விற்பனைக்கு வந்தவை என்று எண்ணிவிட வேண்டாம். நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த பொம்மைகளை காட்சிக்காக வைத்திருப்பது காண்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது. வீட்டிலுள்ள வரவேற்பறை மற்றும் இரண்டு அறைகளில் பிரமாண்டமாக கொலு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றை நேர்த்தியாகவும், வரிசையாகவும் அடுக்கி வைத்திருப்பது அனைவரையும் கவருகிறது. இதில் இடம்பெற்ற சிலைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வாங்கப்பட்டவை. இதுமட்டுமல்லாமல், நேபாளம், ஜப்பான், பெல்ஜியம் ஆகிய வெளிநாடுகளிலிருந்தும் வாங்கி வரப்பட்டவை. கொலுவில் திருப்பதி பிரம்மோற்சவ செட், முருகனின் அறுபடை வீடு, பார்க்கடலில் அசுரரும், தேவரும் அமிர்தம் கடையும் காட்சி, நளதமயந்தி, விசுவாமித்திரர்-மேனகா சிலைகள், சிவனின் பல்வேறு தோற்றங்கள், மார்க்கண்டேயன் சிலைகள், ராமர் பாலம், அசோக வனம் போன்ற புராணக் கதைகளை வெளிப்படுத்தும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக நன்னெறி பரப்பும் கதைகளை சிலைகள் மூலம் வலியுறுத்தும் காட்சிகள் என எண்ண முடியாத அள விற்கு அடுக்கி கொண்டே போகும் வகையில், பொம்மைகளின் அணி வகுப்பு பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. கோவிந்தராஜூலு-கிரிஜா தம்பதியினர் மற்றும் இவர்களது மருமகன் பிரேம்சந்தர்-ஸ்ரீமதி ஆகியோர் கூறும்போது' கொலு வைப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், தற்போது தொடர்ந்து இடைவிடாமல் கொலு வைப்பது எங்களுக்கு மன திருப்தியை கொடுக்கின்றது. 9 நாள் நவராத்திரி கொலு என்றாலும், நவராத்திரி முடிந்த பிறகும், பலர் எங்கள் வீடு தேடி கொலுவை பார்க்க வருவார்கள் என்பதால் பொம்மைகளை சிறிது நாள் கழித்துதான் கொலுவிலிருந்து எடுத்து வைப்போம்' என்றனர்.






      Dinamalar
      Follow us