/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய தலைவர்களுடன் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இன்று சந்திப்பு
/
தேசிய தலைவர்களுடன் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இன்று சந்திப்பு
தேசிய தலைவர்களுடன் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இன்று சந்திப்பு
தேசிய தலைவர்களுடன் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இன்று சந்திப்பு
ADDED : ஜூலை 03, 2024 05:45 AM
புதுச்சேரி,: அமைச்சர்களை மாற்ற வலியுறுத்தி, டில்லி சென்ற பா.ஜ., எம்.எல்.ஏ., மற்றும் ஆதரவு தரும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள்., இன்று பா.ஜ., தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்., பா.ஜ., ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள்., போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக பா.ஜ., தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து புகார் தெரிவிப்பதற்காக நேற்று முன்தினம் டெல்லி சென்றனர்.
டெல்லியில் முகாமிட்டுள்ள அவர்கள் நேற்று முக்கியத்தலைவர்களை சந்திக்க முயற்சித்தனர்.
பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடப்பதால் அவர்களால் யாரையும் சந்திக்க முடியவில்லை. இன்று பா.ஜ., தலைவர்களை சந்தித்து அமைச்சர்களை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளனர்.