ADDED : ஜூலை 14, 2011 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : இடுப்பு எலும்பு முறிவால் அவதிப்பட்டு வந்த முதியவர், தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.பின்னாட்சிக்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அப்பு (85).
கடந்த ஜனவரி மாதம் இவரின் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வலி அதிகமானதால் மனமுடைந்த அப்பு, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்னையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வகணபதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

