ADDED : மார் 26, 2024 05:03 AM
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் சாலையில் கிடந்த 1.5 சவரன் தாலி செயின் நாணலை ஆட்டோ டிரைவர் போலீசிடம் ஒப்படைத்தார்.
புதுச்சேரி முதலியார்பேட்டை சேர்ந்தவர் செழியன். ஆட்டோ டிரைவர். முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் தனது ஆட்டோ அருகில் நின்றிருந்தபோது, சாலையில் தாலி செயினில் கோர்க்க கூடிய நாணல் பிளாஸ்டிக் கவரில் கிடந்தது. செழியன் அதனை எடுத்து யாரேனும் நகையை தவறவிட்டு தேடுகிறார்களா என பார்த்தார். யாரும் உரிமை கோரவில்லை.
இதனால் எதிரில் உள்ள முதலியார்பேட்டை போலீசில் நகையை செழியன் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், நகை 1.5 சவரன் எடை, ரூ. 80 ஆயிரம் மதிப்பு கொண்டது தெரியவந்தது. நேற்று காலை வரை நகையை தேடி யாரும் வரவில்லை. இதனால் 1.5 சவரன் நகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சாலையில் கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் செழியனை, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சால்வை அணிவித்து பாராட்டினார்.

