ADDED : ஏப் 09, 2024 11:19 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் சாலையில் நின்று கொண்டு, கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் சாலையில் நேற்று வாலிபர் ஓருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, அரியாங்குப்பம் போலீசார், அந்த பகுதியில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 25; என தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.
