/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிவாரணம் வழங்க சி.ஐ.டி.யு., கோரிக்கை
/
நிவாரணம் வழங்க சி.ஐ.டி.யு., கோரிக்கை
ADDED : ஏப் 01, 2024 06:25 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மதில் சுவர் இடிந்து விழுந்து இறந்த குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு., அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சீனுவாசன் அறிக்கை:
மரப்பாலம் அருகே வசந்த நகரில், மதில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். புதுச்சேரியில், பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகின்றன.
இதில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு அடிப்படை தேவைகள், பாதுகாப்பு பற்றி அரசு தொழிலாளர் துறை கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை.
அப்படி வேலை செய்யும் தொழிலாளர் பலர் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லாமல் இருக்கிறது.
அதனால், இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத் தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெறும் தொழிலாளி குடும்பத்தினருக்கு தல ரூ.5 லட்சமும் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

