நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்,: உடல் நிலை பாதிக்கப்பட்டவர் மனமுடைந்து துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராசு, 69; இவர் நீரிழிவு நோய் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் நிலை குணமாகததால், விரக்தியில் அவர் நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.