/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 14, 2024 06:16 AM

வில்லியனுார்: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அரசு நலவழித்துறை தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்டம் மற்றும் மகாத்மா காந்தி பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாமகள்கவிதை தலைமை தாங்கினார். பெண் சுகாதார மேற்பார்வையாளர் சாகிராபானு, சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர் ராமன் முன்னிலை வகித்தனர். பாரா மெடிக்கல் கல்வி நிறுவனர் சின்னசாமி வரவேற்றார்.
டாக்டர் பாமகள்கவிதை கண்தானம், பார்வை குறைபாடுகள் மற்றும் அதனை சரிசெய்யும் வழிமுறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் முன்னதாக ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண்தான விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தினர். அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். ரெட் கிராஸ் ஆயுட்கால உறுப்பினர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வில்லியனூர் நண்பர்கள் வட்ட ஒருங்கிணைப்பாளர் பரசுராமன் மற்றும் நண்பர்கள் செய்தனர்.