/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை
/
மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை
ADDED : மே 08, 2024 12:12 AM
நெட்டப்பாக்கம் : திருமணமான மூன்று மாதத்தில் மனைவி வாழாமல் தாய் வீட்டிற்கு சென்றதால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மடுகரை டி.ஆர்.நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் 23, தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும் வடுக்குப்பத்தைச் சேர்ந்த சந்திரலேகாக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான மூன்று மாதத்தில் சந்திரலேகா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து தாய்வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வருத்தத்தில் இருந்த லோகநாதன் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் அவரது அறையில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தம்பி புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

