/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி
/
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 14, 2024 05:20 AM
புதுச்சேரி: காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ., பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் பெரியக்காலாப்பட்டில் ஜவகர் நவோதயா பள்ளி இயங்கி வருகின்றது.
இப்பள்ளி சி.பி.எஸ்.இ., பிளஸ்2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அறிவியல் பிரிவில் 28 மாணவர்கள், வணிகவியல் பிரிவில் 35 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பிரிவில் மாணவர் யோகஸ்ரீ 459 மதிப்பெண்,தீபன் 448, லோகேஸ்வரி 441 முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வணிகவியல் பிரிவில்,ஹிமிமா 471,ஹரிஸ் 469, தேவிகா 447 மதிப்பெண்களை எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய 78 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கிேஷார் 475, லோகேஷ் 470,புவியரசன் 467 என முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மாணவர்கள் கிேஷார்,ஸ்ரீமன் ஆகியோர் கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களை பிடித்தனர்.
தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களை, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் கண்ணதாசன்,துணை முதல்வர் சில்வான்ஸ் ஆகியோர் பாராட்டினர்.தேர்வு எழுதிய மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறத்தை சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

