/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து துறையில் பேன்சி எண்கள் ஏலம்
/
போக்குவரத்து துறையில் பேன்சி எண்கள் ஏலம்
ADDED : மே 11, 2024 04:53 AM
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறையின் பி.ஒய் -04 பி (ஏனாம்) வரிசையில் உள்ள எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில் வரும் 13ம் தேதி காலை 11 மணி முதல் 21ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்பட உள்ளது.
ஏலத்தில் பங்கேற்க தேவையான பெயர் (பயன்படுத்துபவர் பெயர்) மற்றும் கடவு சொல்லை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் New Public User கிளிக் செய்வதன் மூலம் வரும் 20ம் தேதிக்குள் பெற்றுக் கொள்லாம். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே 21ம் தேதி காலை 11.00 மணி முதல் மாலை 4.30 வரை ஏலத்தில் பங்கு பெறலாம்.
இந்த 'இ.ஆக் ஷன்' முறையில் பங்கேற்க விரும்புவோர், அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை வரும் 13ம் தேதி முதல் https://transport.py.gov.in என்ற இணைய தள முகவரியில் பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம்.
இதர விபரங்களை போக்குவரத்துத் துறை அலுவலகத்தின் தொலைப் பேசி எண் 0413- 2280170 தெரிந்து கொள்ளலாம். ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் இணைய தளம் வாயிலாக மட்டும் பெறப்படும்.