/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.ஏ.ஓ.,விடம் பொதுமக்கள் வாக்குவாதம்; வீடியோ வைரல்
/
வி.ஏ.ஓ.,விடம் பொதுமக்கள் வாக்குவாதம்; வீடியோ வைரல்
வி.ஏ.ஓ.,விடம் பொதுமக்கள் வாக்குவாதம்; வீடியோ வைரல்
வி.ஏ.ஓ.,விடம் பொதுமக்கள் வாக்குவாதம்; வீடியோ வைரல்
ADDED : செப் 10, 2024 06:50 AM
புதுச்சேரி: சான்றிதழ் வழங்காமல் காலம் கடத்தியதால், பொதுமக்கள் வி.ஓ.வி.,யிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏனாம் பகுதியில், அரசு சார்பில், கணவரால், கைவிடப்பட்டவர்கள், முதியோர் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் பெறவும், பள்ளி மாணவர்கள் சான்றிதழ் கேட்டு, அப்பகுதி வி.ஏ.ஒ., அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளனர்.
விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல், காலம் கடத்தி வருவதாக, பொதுமக்கள், மாணவர்கள், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சென்று, வி.ஏ.ஒ.,விடம் வாக்குவாதம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.