sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி விவாதம்

/

சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி விவாதம்

சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி விவாதம்

சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி விவாதம்


ADDED : ஆக 02, 2024 01:15 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லஞ்சம் பெற்றுக் கொண்டு சிவப்பு ரேஷன் கார்டு வழங்கிய குற்றச்சாட்டை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட கோரி எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடந்தது.

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன் பேசுகையில்;

குடிமைப்பொருள் வழங்கல் துறையில் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்ட சிவப்பு ரேஷன் கார்டுகளில் முறைகேடு நடந்துள்ளது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சிவப்பு ரேஷன் கார்டு என்ற நிலை உருவாகி விட்டது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கை விட கூடுதலாக 1 லட்சம் கார்டுகள் உள்ளதால், எப்படி நலத்திட்டம் கொண்டு வர முடியும். கடந்த 3 ஆண்டுகள் வழங்கி ரேஷன் கார்டுகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

அமைச்சர் சாய் சரவணன்: யாருக்கும் தவறான வழியில் ரேஷன் கார்டு வழங்கவில்லை.

நேரு: ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கி கொண்டு சிவப்பு ரேஷன் கார்டு வழங்கி உள்ளனர்.

அமைச்சர் சாய் சரவணன்; ஆதாரம் இல்லாமல் பேசாதீர்கள்.

பி.ஆர்.சிவா: ரேஷன் கார்டு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள்.

சாய் சரவணன்குமார்: குற்றச்சாட்டை நிருபிக்க ஆதாரம் வேண்டும். ஆதாரம் இருக்கிறதா? லஞ்சம் எங்கு யாருக்கு தந்தார்கள் என்பதை தெளிவாக கூறுங்கள்.

அங்காளன்: துறையே அமைச்சரை விட்டு போய்விட்டது. அது தெரியாமல் பேசுகிறார். முறைகேடு நடக்கவில்லை என்றால், ஏன் குடிமை பொருள் அலுவலகம் 6 மாதம் மூடப்பட்டு கிடக்கிறது.

சாய்சரவணன் குமார்: அதிகமானோர் விண்ணப்பித்தால் நிறுத்தி வைத்துள்ளோம்






      Dinamalar
      Follow us