/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் தொடர் மருத்துவ கருத்தரங்கு
/
அரசு மருத்துவமனையில் தொடர் மருத்துவ கருத்தரங்கு
ADDED : ஆக 31, 2024 02:20 AM

புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் நடந்த தொடர் மருத்துவ கருத்தரங்கில், மூட்டு மற்றும் இருதய அறுவை சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் நடந்த தொடர் மருத்துவ கருத்தரங்கு நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அதில், சென்னை சிம்ஸ் மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் முகமது இத்ரீஸ், தமணியும், அதன் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
அதனை தொடர்ந்து, மூடநீக்கியல் சிறப்பு மருத்துவர் வேல்முருகன் விபத்து காரணமாக ஏற்படும் கால் மற்றும் மூட்டு பாதிப்பு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்வது குறித்து, விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, மருத்துவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், உள்ளிருப்பு, மருத்துவ அதிகாரி, ஷமிமுனிசா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறை தீர்ப்பு அதிகாரி ரவி உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.