தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கஞ்சா கடத்திய வாலிபர் கைது


ADDED : ஏப் 11, 2024 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 04:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 45 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை போலீசார் கடந்தாண்டு 100 அடி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது 45 கிலோ கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளியான நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் 36, என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இவர் மீது போக்சோ உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் அலெக்ஸ் நோணாங்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த அலெக்ஸ் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us