/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூன்று அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
/
மூன்று அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 10, 2024 11:40 PM
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் மூன்று அரசு உயர்நிலைப் பள்ளிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் 2023-24ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், புதுச்சேரி அளவில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள 7 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதில், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொகுதியான மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட சுத்துக்கேணி, சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளிகள், வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
மேலும், திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.