sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியை சுற்றிப் பார்க்க... இலவச சைக்கிள் சேவை

புதுச்சேரியை சுற்றிப் பார்க்க... இலவச சைக்கிள் சேவை

புதுச்சேரியை சுற்றிப் பார்க்க... இலவச சைக்கிள் சேவை


ADDED : செப் 01, 2024 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 04:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சைக்கிளில் சென்று புதுச்சேரியை சுற்றி பார்க்க இலவச 'சைக்கிள் சேவை'யை அலையான்ஸ் பிரான்ஸ்சிஸ் பிரெஞ்ச் கல்வி நிறுவனம் துவங்கி உள்ளது.

புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புதுச்சேரியின் புகழ் பெற்ற சுற்றுலா தளமான ஒயிட் டவுன், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், மியூசியம், பிரெஞ்சு ஆலயம், சட்டசபை, கவர்னர் மாளிகை, பாரதி பூங்கா, கடற்கரை பகுதி என அனைத்துமே இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவிலேயே அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் எப்பொழுதுமே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

தற்போது இந்த பகுதிகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் தங்கள் கல்வி நிறுவன மாணவர்கள் சைக்கிளில் சென்று பார்வையிடுவதற்கு வசதியாக புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையான்ஸ் பிரான்ஸ்சிஸ் பிரெஞ்ச் கல்வி நிறுவனம் இலவச 'சைக்கிள் சேவை'யை துவக்கி உள்ளது.

அதை யொட்டி இரண்டு புது சைக்கிள்கள் பிரெஞ்ச் கல்வி நிறுவன வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் கல்வி நிறுவனத்தில் உள்ள ஊழியரிடம் தங்களது ஆவணம் மற்றும் குறைந்தபட்ச ஒரு தொகையை டிபாசிட்டாக கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துச் செல்லலாம். காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை சைக்கிளை பயன்படுத்தலாம். சைக்கிளை மீண்டும் விடும் போது தாங்கள் கொடுத்த டிபாசிட் தொகை, ஆவணம், ஆகியவை திரும்ப தரப்படும்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் பயனடைவர் என கல்வி நிறுவன ஊழியர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us