/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உணவு பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
/
உணவு பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஆக 14, 2024 06:07 AM

திருக்கனுார்: திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் மற்றும் உணவு பாதுகாப்பின் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். முகாமில் காரைக்கால் அரசு வேளாண் கல்லுாரி பேராசிரியர் ரத்தின சபாபதி கலந்து கொண்டு கத்தரிக்காய், பூ வகைகள் ஆகியவற்றில் நோய் தாக்குதல் தடுப்பு குறித்து விளக்கம் அளித்தார்.
மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் அகிலன் பங்கேற்று புதிய நெல் ரகங்கள் மற்றும் விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், தங்கதுரை மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
இதில், செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, திருக்கனுார், மணலிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

