/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
1.5 சதவீதம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடா? அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., எதிர்ப்பு

ADDED : ஆக 15, 2024 05:00 AM
புதுச்சேரி: சட்டசபை பூஜ்ய நேரத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசியதாவது:
புதுச்சேரி மாநிலம் எந்த விதமான தரவுகள் இல்லாமல் 1.5 சதவீதம் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறுசமூகங்களின் மத்தியில் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அமைச்சரவை முடிவில்லாமல்தன்னிச்சையாக இட ஒதுக்கீடு முறையினால் ஓ.பி.சி., எம்.பி.சி., மூஸ்லீம், மீனவர், பி.டி., பட்டியலினம் உள்ளிட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இ.டபுள்யூ.எஸ்., சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிலும் மாநில அரசுகள் இதனை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவும் இல்லை.
மேலும் பா.ஜ., ஆட்சி செய்த கர்நாடகா மாநிலத்திலும் அப்போதைய பா.ஜ., அரசு கடும் எதிர்ப்பின் காரணமாக அமுல்படுத்தவில்லை.
கேளராவில் கணக்கெடுப்பு நடத்தி வெறும் சதவீத இட ஒதுக்கீடு தான் அளித்துள்ளனர் . பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆணையம் அமைத்துஅரசு பரிந்துரைத்தப் பின்னர் தான் புதுச்சேரியில் இட ஒதுக்கீடு முறை அமுலானது.வெறும் 1.5 சதவீதம் உள்ள நவீன ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடுசமூகத்தில் மாநிலத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளதை முதல்வர் கவனிக்க வேண்டும். தற்காலிகமாக இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்றார்.