/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு 10 சவரன் காசு மாலை பட்டு புடவை
/
சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு 10 சவரன் காசு மாலை பட்டு புடவை
சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு 10 சவரன் காசு மாலை பட்டு புடவை
சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு 10 சவரன் காசு மாலை பட்டு புடவை
ADDED : மார் 08, 2025 03:57 AM

பெரம்பலுார் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, அம்மனுக்கு 10 சவரன் காசு மாலை மற்றும் பட்டுப்புடவை சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் 1 மணியளவில் பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக, 10 சவரன் தங்கக்காசு மாலையும், பட்டு புடவையும் சாத்தினார்.
இதைத்தொடர்ந்து, மஹா தீபாரதனை தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த முதல்வர், உற்சவர் அம்மனை வணங்கினார். பின், கோவில் பிரகாரத்தை வலம் வந்த அவர், கோவில் மண்டபத்தில் அமர்ந்தும், உள்பிரகாரத்தில் நின்றவாறும் தியானத்தில் ஈடுபட்டார்.
தரிசனம் முடித்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி அளித்த பேட்டி:
அடிக்கடி மதுரகாளியம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வர முடியவில்லை. இன்று வர வேண்டும் என்று நினைத்தேன் வந்து சுவாமி தரிசனம் செய்து, நேர்த்தி கடனை செலுத்தி உள்ளேன். அம்பாளை பற்றி எனக்கு தெரியும், அவள் சக்தி என்ன என்று தெரியும் கண்டிப்பாக வேண்டுதலை நிறைவேற்றுவாள்.
வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி வெற்றி வாய்ப்புக்காக அம்மனை வேண்டுதல் செய்தீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, புன்னகைத்தவாறு பதில் அளிக்காமல் சென்று விட்டார். அவருடன் அவரது கட்சி முக்கிய நிர்வாகிகள் பாதுகாப்பு அதிகாரிகள் வந்திருந்தனர்.