/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி
/
அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி
அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி
அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 07, 2024 04:08 AM

புதுச்சேரி : புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 768 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, நுாறு சதவீத சாதனை படைத்துள்ளது.
புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 768 மாணவர்களும், தேர்ச்சி பெற்றுள்ளனர். உயிரியில் பாட பிரிவில் பயின்ற மாணவன் ரெயான் அல்பிரிட் டேவிட் 600க்கு 589 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு 4 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
மாணவி மித்ரசாயா 585 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2வது இடமும், மாணவன் ரோகி 584 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு முறையே 2 கிராம் மற்றும் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
550 மதிப்பெண்ணிற்கு மேல் 52 மாணவர்களும், 198 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 446 மாணவர்கள் 75 சதவீதத்திற்கு மேலும், 303 மாணவர்கள் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரெஞ்சு பாடத்தில் 52 மாணவர்களும், இயற்பியல்-1, உயிரியல்-1, கணிதம்-1, வேதியியல்-2, கம்யூட்டர் சயின்ஸ் -25, பொருளாதாரம்-2, வணிகவியல் -7 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை மாணவர்களை பள்ளியின் முதுநிலை முதல்வர் லுார்துசாமி பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.