/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
100 சதவீத ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு மணல் சிற்பம்
/
100 சதவீத ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு மணல் சிற்பம்
100 சதவீத ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு மணல் சிற்பம்
100 சதவீத ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு மணல் சிற்பம்
ADDED : ஏப் 14, 2024 05:19 AM

காரைக்கால்: காரைக்காலில் தேர்தல்துறை சார்பில் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி கடல்கரையில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் அறிவுறுத்தலின் பேரில், தேர்தல் துறை சார்பில், 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் காரைக்கால் கடற்கரைக்கு வருகை புரிந்தவர்கள் மணல் சிற்பத்தை கண்டு களித்தார்கள்.
நிகழ்ச்சியில் தேர்தல் துறை கண்காணிப்பாளர் வித்யாதரன், ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உட்பட பலர் உடனிருந்தனர்.