/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாறு சதவீதம் ஓட்டளிக்க துண்டு பிரசுரம்: 60 ஆயிரம் காஸ் சிலிண்டருடன் விநியோகம்

ADDED : ஏப் 09, 2024 05:12 AM

புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டு பதிவினை இலக்காக கொண்டு 60 ஆயிரம் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்டத்தின் கீழ், 100 சதவிகித ஓட்டு பதிவினை எட்ட தேர்தல் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.
அந்தவரிசையில்,வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும்போது, ரசீதுடன், 100 சதவீத ஓட்டு பதிவு இலக்கினை மையமாக வைத்து வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்கப்பட உள்ளது.
இதற்காக, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன விநியோகஸ்தர்களுடன் தேர்தல் துறை கைகோத்துள்ளது.
வரும் 18 ம்தேதி வரை மொத்தம் 60 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதனை துணை மாவட்ட தேர்தல் அதிகாரி வினயராஜ் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் துவக்கி வைத்து,விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களிடம் வழங்கினார்.