/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாறு சதவீத ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்
/
நுாறு சதவீத ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஏப் 18, 2024 05:02 AM

புதுச்சேரி : மூலகுளம் பிலபாங் பள்ளி சார்பில், நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலையொட்டி, புதுச்சேரி மூலகுளம் பிலபாங் பள்ளியின் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில் மாணவர்கள் நுாறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு ஓட்டளிப்பதின் முக்கியத்துவம், கடமை, உங்கள் ஓட்டு உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பாதைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலம் பள்ளியில் இருந்து புறப்பட்டு மூலக்குளம் பகுதியில் உள்ள அனைத்து வீதிகள், மூலகுளம் பிரதான சாலைகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்களை தேர்தல் துறை அதிகாரிகள் பாராட்டினர்.

