/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேவல் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பல மாநிலங்களை சேர்ந்த 1,000 சேவல்கள் பங்கேற்பு
/
சேவல் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பல மாநிலங்களை சேர்ந்த 1,000 சேவல்கள் பங்கேற்பு
சேவல் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பல மாநிலங்களை சேர்ந்த 1,000 சேவல்கள் பங்கேற்பு
சேவல் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பல மாநிலங்களை சேர்ந்த 1,000 சேவல்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 07, 2024 03:45 AM

பொங்கல் பண்டிகையின்போது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, கிடா சண்டை, சேவல் சண்டைகள் தமிழகத்தில் நடப்பது வழக்கம். புதுச்சேரியிலும் பல ஆண்டுகளுக்கு முன், சேவல் சண்டை நடந்தது.
சேவல்கள் துன்புறுத்தப்படுகிறது. சூதாட்டம் நடப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என புகார் எழுந்ததால் சேவல் சண்டைக்கு புதுச்சேரி அரசு தடை விதித்தது. தடையை மீறி சேவல் சண்டை நடத்தியவர்களை போலீசார் வழக்கு பதிந்து சேவல்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், தேங்காய்த்திட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சில நிபந்தனைகளுடன் புதுச்சேரியில் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையத்தில் 2 நாட்கள் நடக்கும் சேவல் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை துவக்க விழா நேற்று நடந்தது. 60 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும், வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டிக்காக, 50க்கும் மேற்பட்ட களம் அமைக்கப்பட்டு இருந்தது.
இப்போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டுவரப்பட்டன. சேவல் சண்டையை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். போட்டியில் வெற்றி பெறும் சேவல்களுக்கு இன்று பரிசளிக்கப்படுகிறது.
சேவல் சண்டை ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், 'வெற்றுக்கால் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கி றோம். பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.