/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1.02 கோடிக்கு போலி அரசாணை சமர்ப்பிப்பு ஹைமாஸ் விளக்கு பணம் பெற நுாதன மோசடி
/
ரூ.1.02 கோடிக்கு போலி அரசாணை சமர்ப்பிப்பு ஹைமாஸ் விளக்கு பணம் பெற நுாதன மோசடி
ரூ.1.02 கோடிக்கு போலி அரசாணை சமர்ப்பிப்பு ஹைமாஸ் விளக்கு பணம் பெற நுாதன மோசடி
ரூ.1.02 கோடிக்கு போலி அரசாணை சமர்ப்பிப்பு ஹைமாஸ் விளக்கு பணம் பெற நுாதன மோசடி
ADDED : செப் 08, 2024 05:40 AM
மர்ம நபர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீஸ் வழக்கு
புதுச்சேரி: ஹைமாஸ் விளக்கு அமைத்த பணம் ரூ. 1.02 கோடி பெறுவதற்கு, போலி அரசாணை சமர்ப்பித்த மர்ம நபர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த 2014 ஆண்டுகளில் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரை பெயரில் ஆங்காங்கே ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டது. பணிகளை முடித்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மூலம் செலவின தொகைக்கு அரசு ஆணை பெற்று ஹைமாஸ் விளக்கு பொருத்திய எலட்ரிக்கல் கான்ட்ராக்டர்கள் பணத்தை பெற்றனர்.
அந்த சமயம் பாட்கோ மூலம் ஏராளமான ஹைமாஸ் விளக்குகள் போடப்பட்டது. அவை முறைகேடாக நிதி கையாளப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, பாட்கோ மூலம் போடப்பட்ட ஹைமாஸ் விளக்குகள் குறித்து அப்போதைய கவர்னர் கிரண்பேடி சி.பி.ஐ.,க்கு, பரிந்துரை செய்தார்.
பொதுப்பணித்துறை ஹைமாஸ் விளக்கு அமைக்கும் பணிக்கு அனுமதி அளிக்க கூடாது என உத்தரவிட்டார்.
இந்நிலையில், தட்டாஞ்சாவடி பகுதியில் எலக்ட்ரிக்கல் கான்டராக்டர் குப்புசாமி மூலம் 26 இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. அப்போது, ஹைமாஸ் விளக்குகளுக்கான பணம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
ஹைமாஸ் விளக்கு அமைத்தற்கான செலவின தொகையை வழங்க தலைமை பொறியாளர் கையெழுத்திட்டு 3.04.2019 தேதியிட்ட அரசாணை மூலம் தனக்கு பணிகளுக்கு பணம் தர பொதுப்பணித்துறையில் குப்புசாமி வலியுறுத்தினார்.
இந்நிலையில், 2021 ஜூன் மாதம் குப்புசாமி தாக்கல் செய்துள்ள அரசாணையில், 13 அரசாணைகள் ஒய்வு பெற்ற தலைமை பொறியாளர் கையெழுத்திட்ட போலி அரசாணை என புகார் கடிதம் வந்தது. இதற்கிடையே கடந்த 2023ம் ஆண்டு, தான் செய்து முடித்த ஹைமாஸ் விளக்குகளுக்கு ரூ. 1.02 கோடி பணம் வழங்க உத்தரவிட குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை விசாரித்தபோது, 13 அரசாணைகள் போலியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி.க்கு, புகார் சென்றது. போலியான அரசாணை சமர்ப்பித்த அடையாளம் தெரியாத நபர் மீது மோசடி, போலி அரசு ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.