/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரம் கோவிலில் 108 சங்காபிேஷகம்
/
சாரம் கோவிலில் 108 சங்காபிேஷகம்
ADDED : ஏப் 19, 2024 05:25 AM

புதுச்சேரி : சாரம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி, 108 சங்காபிேஷகம் நடந்தது.
புதுச்சேரி, சாரம், நாகமுத்து மாரியம்மன் கோவிலில் உள்ளது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி, கடந்த 14ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, அம்மன் வீதியுலா நடந்தது. 16ம் தேதி, உஞ்சல் உற்சவத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் நாகமுத்து மாரியம்மனுக்கு, இரவு 7:00 மணிக்கு கலசாபிேஷகம், 108 சங்காபிேஷகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை, கோவில் அதிகாரி நீலகண்டன், சிவராம் குருக்கள், கார்த்திகேயன் குருக்கள், உதவி அர்ச்சகர் முத்துகுமாரசாமி, உபயதாரர் திருநாவுகரசு ஆகியோர் செய்திருந்தனர்.

