/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புற்று நோயாளிகள் சிகிச்சைக்காக போலீசார் 109 பேர் ரத்த தானம்
/
புற்று நோயாளிகள் சிகிச்சைக்காக போலீசார் 109 பேர் ரத்த தானம்
புற்று நோயாளிகள் சிகிச்சைக்காக போலீசார் 109 பேர் ரத்த தானம்
புற்று நோயாளிகள் சிகிச்சைக்காக போலீசார் 109 பேர் ரத்த தானம்
ADDED : ஜூலை 01, 2024 06:28 AM

புதுச்சேரி: ஜிப்மரில் புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக பயிற்சி போலீசார் 109 பேர் ரத்த தானம் செய்தனர்.
கோரிமேடு ஜிப்மருக்கு விபத்தில் சிக்கி அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், குழந்தைகள் அறுவை சிகிச்சைகள் மற்றும் புற்று நோயாளிகளுக்கு தேவையான ரத்தம் குறைவாக உள்ளது. இதனால், ஜிப்மர் நிர்வாகம் புதுச்சேரி போலீஸ் துறையை அணுகி ரத்த தானம் செய்ய முன்வர கோரிக்கை விடுத்தது.
டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் உத்தரவின்பேரில், போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் போலீசார் ரத்த தானம் செய்தனர். ஜிப்மர் ரத்த வங்கி நிபுணர்கள் மொபைல் வாகனம் மூலம் நேரடியாக வந்து ரத்த தானம் பெற்றனர்.
போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி., ரங்கநாதன், இன்ஸ்பெக்டர்கள் பங்கஜ்குமார், ரகுபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நேற்றைய முகாமில், 109 பேர் ரத்த தானம் வழங்கினர்.