/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
11 அரசு கல்லுாரிகள் தரம் உயர்த்தப்படும்
/
11 அரசு கல்லுாரிகள் தரம் உயர்த்தப்படும்
ADDED : ஆக 02, 2024 11:39 PM
புதுச்சேரி : மடுகரை பகுதியில் உள்ள ஒரு மேனிலைப்பள்ளியை 15 கோடி ரூபாய் செலவில் முன் மாதிரி கலை கல்லுாரியாக மாற்றப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி துறை குறித்து முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்:
சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மருத்துவம், பொறியியல், செவிலியர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம் தொடர்ந்து வழங்கப்படும். இதன் மூலம் மருத்துவ படிப்பில் 650 மாணவர்கள், பொறியியல் படிப்பில் 5,600 மாணவர்கள், நர்சிங் படிப்பில் 700 மாணவர்கள் என மொத்தம் 6,950 மாணவர்கள் பயனடைவர்.
கல்வி நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக மடுகரை பகுதியில் உள்ள ஒரு மேனிலைப்பள்ளியை 15 கோடி ரூபாய் செலவில் இந்த நிதியாண்டில் முன் மாதிரி கலைக் கல்லுாரியாக மாற்றுவதற்கு உத்தேசித்துள்ளது. மத்திய அரசு பங்களிப்புடன் 11 கல்லுாரிகளை 5 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும். அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பப்படும். உயர் கல்வி துறைக்கு இந்தாண்டு 330.92 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.