ADDED : மார் 13, 2025 06:30 AM
பட்ஜெட் உரையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள், உபகரணங்கள் வழங்கப்படும். 11 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கும், 28 அங்கன்வாடி மையங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசின் திறன்மிகு அங்கன்வாடி திட்டத்தின் கீழ் 65 அங்கன்வாடி மையங்கள் தரம் உயர்த்தப்படும். நான்கு பிராந்தியங்களிலும் சிறார்களுக்கான காப்பகம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் குழந்தைகள் நலக் குழுமம், இளஞ்சிறார் நீதிக் குழுமம் மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் அமைக்கப்படும்.