/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
12 பேரிடம் ரூ. 10.15 லட்சம் மோசடி
/
12 பேரிடம் ரூ. 10.15 லட்சம் மோசடி
ADDED : மே 16, 2024 03:04 AM
புதுச்சேரி: வாணரப்பேட்டை, கல்லறை வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் வீட்டில் இருந்தபடி வேலை செய்யலாம் எனக் கூறி, சில டாஸ்க்குகளை கொடுத்தனர். சீனிவாசன் ரூ. 8.21 லட்சம் பணம் செலுத்தி, டாஸ்க்குகளை முடித்தார். ஆனால் முதலீடு செய்த பணம் மற்றும் லாப பணத்தை எடுக்க முடியாமல் ஏமாந்தார்.
காரைக்கால், திருநள்ளாரைச் சேர்ந்த கங்கை என்ற பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், பார்சலில் தங்க நகைகள் வந்துள்ளதாகவும், அதற்கு வரி செலுத்த வேண்டும் என, கூறியதை நம்பி, ரூ. 1.32 லட்சம் அனுப்பி ஏமாந்தார். இதுபோல் பல்வேறு வழிகளில் 12 பேரிடம் மொத்தம் ரூ. 10.15 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.