/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு அரசு கல்லுாரியில் 127 பேர் சேர்ந்தனர்
/
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு அரசு கல்லுாரியில் 127 பேர் சேர்ந்தனர்
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு அரசு கல்லுாரியில் 127 பேர் சேர்ந்தனர்
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு அரசு கல்லுாரியில் 127 பேர் சேர்ந்தனர்
ADDED : செப் 09, 2024 04:55 AM
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவ கல்லுாரியில் 127 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு கடந்த 1ம் தேதி முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி சென்டாக் இடங்களை ஒதுக்கீடு செய்தது.
5ம் தேதி வரை சீட் கிடைத்த கல்லுாரியில் மாணவர்கள் சேர கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி சீட் கிடைத்த மாணவர்கள் கல்லுாரிக்கு சென்று அசல் சான்றிதழ்களை சமர்பித்து சேர்ந்தனர்.
முதற்கட்ட கலந்தாய்வில் முடிவில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., படிப்பினை பொருத்தவரை, அரசு மருத்துவ கல்லுாரி அரசு ஒதுக்கீட்டில் 126 மாணவர்களும், என்.ஆர்.ஐ., சீட்டில் 1 மாணவர்கள் என, 127 மாணவர்கள் சேர்ந்தனர். பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் அரசு இட ஒதுக்கீட்டில் 56 பேர், சிறுபான்மையினர் நிர்வாக இடத்தில் 6 பேர், என்.ஐ.ஆரில்-3 பேர் என மொத்தம் 65 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டில் 81 பேர், என்.ஆர்.ஐ., பிரிவில் 5 பேர் என 86 பேர் சேர்ந்துள்ளனர். வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டில் 77 பேர், தெலுங்கு சிறுப்பான்மை நிர்வாக இடத்தில் ஒரு மாணவர், என்.ஆர்.ஐ., பிரிவில்-4 பேர் என 82 பேர் சேர்ந்துள்ளனர்.
பல் மருத்துவம், ஆயுர்வேதம்
மாகி ராஜிவ்காந்தி ஆயுர்வேத கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 14 பேர், மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரி கல்லுாரியில் பி.டி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 22 பேர், என்.ஆர்.ஐ., சீட்டில் ஒரு மாணவரும் சேர்ந்துள்ளனர்.
இக்கல்லுாரியில் உள்ள நிர்வாக இடத்தில் 6 பேர் சேர்ந்துள்ளனர். மாகி பல் மருத்துவ கல்லுாரி அரசு ஒதுக்கீட்டு இடத்தில் 8 பேர், நிர்வாக இடத்தில் 3 பேர் சேர்ந்துள்ளனர்.
வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டு இடத்தில் 15 பேர், நிர்வாக இடத்தில் ஒருவர் சேர்ந்துள்ளனர்.