/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை வாய்ப்பு முகாம் 147 பட்டதாரிகள் பங்கேற்பு
/
வேலை வாய்ப்பு முகாம் 147 பட்டதாரிகள் பங்கேற்பு
ADDED : மார் 09, 2025 03:40 AM

புதுச்சேரி : பிரஞ்சு பட்டதாரிகளுக்காக நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 147 பட்டதாரிகள் பங்கேற்றனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான, தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சேவை மையம் சார்பில், அனைத்து சமூகத்தை சேர்ந்த பிரஞ்சு படித்த பட்டதாரிகளுக்கான இலவச வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
புதுச்சேரி ஒயிட் டவுன் சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ்சில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், டாடா கன்சல்டிங் நிறுவனத்தில், பிரஞ்சு மொழி பெயர்ப்பாளர் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடந்தது.
இதில் இளநிலை, முதுநிலை பிரஞ்சு மொழி படித்த 146 பேர் பங்கேற்றனர்.
இறுதி கட்ட தேர்வில் 20க்கும் மேற்பட்டோர் தேர்வாகினர். வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை தேசிய வாழ்வாதார சேவை மைய வேலை வாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.