/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளம்பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ தலை முடி அகற்றம் ஜெம் மருத்துவமனை அசத்தல்
/
இளம்பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ தலை முடி அகற்றம் ஜெம் மருத்துவமனை அசத்தல்
இளம்பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ தலை முடி அகற்றம் ஜெம் மருத்துவமனை அசத்தல்
இளம்பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ தலை முடி அகற்றம் ஜெம் மருத்துவமனை அசத்தல்
ADDED : செப் 04, 2024 06:58 AM

புதுச்சேரி: இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து, 1.5 கிலோ தலை முடியை, ஜெம் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் அகற்றினர்.
புதுச்சேரியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், கடும் வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தியால் கடந்த 2 மாதங்களாக அவதிப்பட்ட நிலையில், புதுச்சேரி ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்ப நோயறிதல் சோதனையில், வயிற்றுக்குள் ஒரு பெரிய பொருள் இருப்பதை வெளிப்படுத்தின. விரிவாகன சோதனையில் முடி பந்து அல்லது முடியை உட்கொள்வதால் ஏற்படும் தீவிரமான இரைப்பை குடல் அடைப்பான 'டிரைக்கோபெஸோர்' என அடையாளம் காணப்பட்டது.
தனி நபர்கள் தங்கள் தலைமுடியை வெளியே இழுத்து விழுங்கும் மனப்பாங்கு கொண்ட இந்த நிலையானது, பெரும்பாலும், 'டிரைகோட்டிலோமேனியா' எனப்படும் உளவியல் கோளாறுடன் தொடர்புடையது.
குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் சசிக்குமார் கூறியதாவது:
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த அறுவை சிகிச்சை, சுற்றி உள்ள திசுக்களுக்கு சேதத்தை குறைக்கும் அதேவேளையில், முடி பந்தை பிரித்தெடுப்பதற்கான விரிவான மற்றும் எச்சரிக்கையான அணுகுமுறையை உள்ளடக்கியது.
நோயாளி விரைவில் மீண்டு வரும் வகையிலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு, பிந்தைய அசவுகரியத்தை குறைக்கும் வகையிலும், டாக்டர்கள் குழு, அறுவை சிகிச்சையை தெளிவாக கையாண்டனர்.
முடியை முழுமையாக அகற்றுவதன் மூலமும், நோயாளியின் செரிமான செயல்பாட்டை மீட்டெடுப்பதன் மூலமும் கடுமையான அறிகுறிகளை குறைப்பதன் மூலமும், இந்த செயல்முறை முடிவடைந்தது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து, 3வது நாளில் இருந்து வழக்கமான உணவை உட்கொள்ள துவங்கினார். மேலும், அவர், 3வது நாளிலேயே, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் பழனிவேலு, மருத்துவ நிபுணர்கள் சசிக்குமார், சுகுமாறன், ரஞ்சித் ஆகியோரை, பாராட்டினார்.