/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கரதாசு சுவாமிகள் 157வது பிறந்த நாள் விழா
/
சங்கரதாசு சுவாமிகள் 157வது பிறந்த நாள் விழா
ADDED : செப் 09, 2024 05:07 AM
புதுச்சேரி: சங்கரதாசு சுவாமிகள் 157வது பிறந்த நாள் விழாவையொட்டி மரியாதை செலுத்தப்பட்டது.
நாடகத் தந்தை எனப் போற்றப்படும் சங்கரதாசு சுவாமிகள் 157வது பிறந்த நாளையொட்டி, கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் ராதே அறக்கட்டளை சார்பில், மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
ராதே அறக்கட்டளை தலைவர் தேவதாசு தலைமைத் தாங்கினார். பாஸ்கர் எம்.எல்.ஏ., சங்கரதாசர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.
கவிஞர் பைரவி தலைமையில் பாவரங்கம் நடந்தது. இதில் 15 கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.
தமிழ் அமைப்புகள் சார்பில் சங்கரதாசர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என, அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி பாஸ்கர் எம்.எல்.ஏ.,விடம் தெரிவிக்கப்பட்டது.
சுகன்யா நன்றி கூறினார்.