/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் 165 வது குரு பூஜை விழா முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

ADDED : மே 12, 2024 05:10 AM

புதுச்சேரி: கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமிகள் திருக்கோவிலில் 165வது பிறந்த நாள் குருபூஜை விழா விமர்சையாக நடந்தது.
புதுச்சேரி திலச வீமகவுண்டன்பாளையம், கோரிமேடு சாலையில் அருள்தரும் சித்தர் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பா பைத்தியம் சுவாமிகளின் 165வது பிறந்த நாள் குரு பூஜை விழா மற்றும் ஆராதனை, அன்னமளிப்பு விழா நேற்று காலை 7:30 மணிக்கு திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்கியது.
தொடர்ந்து புனிதநீர் வழிபாடு உள்ளிட்ட ஆனைந்து வழிபாடும் விமர்சையாக நடந்தது. காலை 8:00 மணிக்கு ஐங்கரன் வழிபாடு, 8:15 மணிக்கு சுவாமிகளுக்கு தமிழால் வேள்வி வழிபாடு, 9:15 மணிக்கு வேள்வி நிறைவும் நடந்தது.
9:30 மணிக்கு அப்பா பைத்திய சுவாமி சிறப்பு திருமஞ்சனத்திலும், 10.30 க்கு மலர் அலங்காரத்திலும் எழுந்தருளினார். 11.30 மணிக்கு பேரொளி வழிபாடு நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.கள் பங்கேற்றனர். இதேபோல் சேலம் சூரமங்கலத்தில் சற்குரு அப்பா பைத்திய சுவாமிகள் கோவிலில் நடந்த பிறந்தநாள் பூஜையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், திருமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ.,வையாபுரிமணிகண்டன் பங்கேற்றனர்.